கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் விரதங்கள் பல, அவற்றுள் சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்றவை பல. அவற்றுள் தைப்பூச விரதம் நட்சேத்திர விரதங்களுள் முக்கியமானது. இத்தினத்தில் சைவத்தமிழ் அடியார்கள் விரதம் இருந்து
முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பால்குடம், அர்ச்சனை செய்வது அவர்களது அனுஷ்டானமாகும்.

நிகழும் மங்களகரமான மன்மத வருடம் தை மாதம் 9ம் நாள் 23-01-2016, சனிக்கிழமை கனடா கந்தசுவாமிp கோவிலில் தைப்பூசவிழா சிறப்பாக நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
தைப்பூச தின நிகழ்வுகள்
1. விநாயகர் ஸ்நபனா அபிசேகம்
2. முருகப் பெருமானுக்கு ஸ்நபனா அபிசேகம்
3. ஆறுமுகப் பெருமானுக்கு நவோத்தர-சகஸ்ர சங்காபிசேகம் (1008)
4. காலை 7:30 மணி முதல் வித்தியாரம்பம் (ஏடுதொடக்குதல்) இடம்பெறும்
5. அன்னப்பிராசனம்: 1.ஆண் பிள்ளைகள் 6, 8, 10, 12ம் மாதத்திலும்
2. பெண் பிள்ளைகள் 5, 7, 9, 11ம் மாதத்திலும் தீத்தலாம்.
6. பால்குடம், சந்தணக்குளம்பு, பன்னீர்குடம், காவடி எடுக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
7. நண்பகல் அன்னதானம் இடம்பெறும்.
8. மாலை 5:00 மணிமுதல் தைப்பூச மாலை உற்சவம் இடம்பெற்று சுவாமி மஞ்சத்தில் வீதிவலம்; வரும் அருள் காட்சி இடம்பெறும்.

முருகன் அடியார்கள் அனைரையும் இவ்விரதத்திலும் விழாவிலும் கலந்துகொண்டு, எம்பெருமானின் அனுக்கிரகங்களை பெற்றுய்யும் வண்ணம் ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.