நிகழும் மங்களகரமான தமிழ் புதுவருடப் பிறப்பு 13-04-2016 புதன்கிழமை முற்பகல் 9:00 மணி 06 நிமிடத்திற்கு “துர்முகி” என்னும் பெயருடன் பிறக்கின்றது.

விசு புண்ணிய காலம்:
13-04-2016 புதன்கிழமை சூரிய உதயத்தின் முன் மு. ப. 5:00 முதல் நண்பகல் 1:06 வரை “விசு” புண்ணிய காலமாகும்.
சிறப்பு நிறம்:
பச்சைக்கரை, வெள்ளைக்கரையமைந்த புதிய பட்டாடை

மருத்து நீர்:
மருத்துநீர் சிரசின்மேல் வைத்து ஸ்நானம் செய்தால் சங்கிர தோசம் நீங்கும்.
10-04-2016ம் திகதி முதல் ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம்.

சங்கிர தோச நட்சத்திரங்கள்:
மிருகசீரிடம்-3ம், 4ம் கால், திருவாதிரை, புனர்பூசம் -1ம், 2ம், 3ம் கால், சுவாதி, விசாகம்-4ம் கால், அனுசம், கேட்டை, சதயம் என்பனவாம்.

கைவிசேசம்: 13-04-2016 புதன்- பகல் 9:52 – 11:58 வரை

விருந்து: 13-04-2016 பகல் 9:52 – 11:58 வரை

வியாபாரம்: 13-04-2016 பகல் 9:52 – 11:58 வரை

ஆலய நிகழ்ச்சி நிரல்:

  • காலை: 13-04-2016 புதன்கிழமை காலை 6:00 மணிக்கு மூலவர் உருத்திரா அபிசேகம், ஏனைய மூர்த்திகள் படிக்கட்டு அபிசேகம்
  • மு. ப. 7:00 மணிக்கு உதயபூசை, மு. ப. 8:00 மணிக்கு சங்கிராந்தித் தீர்த்தம்
  • மு. ப. 09:06 சித்திரை புதுவருட தீபாராதனை (சகல சனனிதிகளிலும் தீபாராதனை இடம்பெற்று, பஞ்சாங்கபலன் வாசிக்கப்படும்.
  • அதனைத் தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று, விபூதிப் பிரசாதம் வழங்கப்படும்.)
  • பக்தர்கள் வசதிகருதி ஆலயம் முழுநாளும் திறந்திருக்கும்.

சித்திரை வருடப்பிறப்பு உற்சவம்:
9:30 – ஸ்நபனா அபிசேகம் (முருகன்)
10:30 – காலைச்சந்திப்பூசை
11:15 – வசந்த மண்டலப்பூசை, சுவாமி மூதிவலம்
12:30 – மகேஸ்வரபூசை
12:30 – அன்னதானம்