நவராத்திரி விரதம் 01-10-2016 சனி முதல் 09-10-2016 ஞாயிறு வரை

நவராத்திரி விரதம்: சக்தி தத்துவம் நம் இந்துமதத்தின் ஆணிவேராக விளங்குகின்றது. ஆன்மாக்களைத் தனது கருணையினால் பிறவிப் பிணியிலிருந்தும் காத்து எல்லாம் வல்ல சிவனிடம் சேர்ப்பவளாக அன்னை பராசக்தி விளங்குகிறாள்.

பூத்தவளாயும் புவனம் பதினான்கையும் காத்தவளாயும், கறை கண்டனுக்கு மூத்தவளாயும் முகுந்தனுக்கு இளையவளாயும் விளங்கும் அன்னை கல்விக்குச் சரஸ்வதியாகவும் செல்வத்துக்கு இலட்சுமியாகவும் மூரத்திற்கு துர்க்கையாகவும் நின்று அருள்புரிகிறாள். இந்த முப்பெருந் தேவியர் விழா 01-10-2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று, 10ம் நாள் 10-10-2016 திங்கட் கிழமை விஜயதசமியன்று காலை 7:31 மணிமுதல் வித்தியாரம்பம் (ஏடு தொடக்குதல) ஆலய குருக்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பெற்றோர்கள்-பெற்றோரின் விருப்பப்படி செய்து வைக்கப்படும். அன்னப்பால் ஊட்டலும் இடம்பெறும். அன்றைய தினம் மாலை கும்பச்சரிவு, மானம்பு (வாழைவெட்டு) என்பன இடம்பெறும்.

அத்துடன் முப்பெரும் தேவிகளின் உற்சவத்தை தொடர்ந்து ஒன்பது நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். அடியார்கள் அனைவரும் இப்பூசை வழிபாடுகளில் தினமும் கலந்துகொண்டு அன்னை அருளை பெற்றேகும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.