புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா? இல்லையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் ஒன்று கனடா கந்தசுவாமி கோவில் கலாச்சார மண்ணடபத்தில் இடம்பெறவுள்ளது. ஒக்ரோபர் 13ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்குபவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சிறி கணேசன் அவர்களாவார்.

கனடா கந்தசுவாமி கோயில் கட்டிட நிதிக்காக நடாத்தப்படும் இந்த நிகழ்வில் செந்தூரன் அழகையா, நாதஸ்வர கலைஞர் வீ. ஆர். எஸ். கணேஸ், தவில் வித்துவான் அண்ணாமலை மனோகரன், தபேலா-மிருதங்க கலைஞர் தில்லையம்பலம் நரேந்திரன் ஆகியோர் வழங்கும் இசை நிகழ்வும் மற்றும் நடன நிகழ்வும் இடம்பெறும்.

முருகன் அடியார்கள், இலக்கிய ரசிகர்கள், இசை ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.