சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி
தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு
சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. “கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல்
கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி நாள் ஆகும்”. அன்றைய இரவு அடியார்கள் யாவரும் ஆலயத்திற்கு
வருகைதந்து முழு இரவும் விரதம் அனுஷ்டித்து முழுமுதற் கடவுளாகிய கௌரி அம்பாள் சமேத கைலாசநாதரின் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் கண்டு அவரின்
இஷ்டசித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

   

அபிஷேகம், பூசை, அர்ச்சனை விபரம்:
 
1ம் சாமம் 6:00 – 9:00 மணி:
1. அஷ்டோத்தர சத கலச சங்காபிசேகம் 2. விசேட பூசை 3. மகா நியாசார்ச்சனை

2ம் சாமம் 9:00 – 12:00 மணி (12:00 – 1:00 வரை லிங்கோற்பவ காலம்):
1. அஷ்டோத்தர சத சங்காபிஷேகம் 2. விசேட பூசை (லிங்கோற்பவ) இறைவன் ஜோதிப் பிழம்பாகத்
தனது உருவத்தைக் காட்டிய நேரம் லிங்கோற்பவ காலமாகும்) 3. திரிசதி நாமார்ச்சனை

3ம் சாமம் 1:00 – 4:00 மணி:
1. ஸ்நபனா அபிஷேகம் 2. விசேட பூசை 3. லகுனியா அர்ச்சனை

4ம் சாமம் 4:00 – 6:00 மணி:
1. உருத்திரா அபிஷேகம் 2. விசேட பூசை 3. அஷ்டோத்தர சத நாமார்ச்சனை.
காலை 6:00 மணிக்கு சிவன் பார்வதி சமேதராக மங்கள வாத்திய இசையுடன் எழுந்தருளி
தீர்த்தமாடி ஆடல் பாடல் பஜனையுடன் மூதிவலம் வந்து அருட்காட்சி கொடுப்பார்.
காலை 7:00 மணிக்கு திருவனந்தல பூசை, மகேஸ்வர பூசை இடம்பெற்று அடியார்களுக்கு
பாறணைப் பிரசாதம் வழங்கப்படும்.
குறிப்பு:

  1. நான்கு சாமப்பூசைகளைத் தொடர்ந்து விசேட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்
  2.  நான்கு சாமமும் பாற்குடம், விசேஷ பூசைத் திரவியங்கள், வில்வம், புஷ்பம்.
    காரியாலயத்தில் பெற்று குருக்கள் லம் அபிசேகம் செய்வித்து சிவராத்திரி விரதத்தை முறையாக அனுஷ்டித்து இறையருளைப் பூரணமாகப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.