Monthly Archives: November 2015

//November
­

சூரன்போர் காட்சிகள் 2015

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் வழமைபோல் சூரன்போர் இவ்வருடமும் மிகவும் சிறப்பாக, ஆலயம் நிரம்பிய பக்தர்கள் புடைசூழ நடந்தேறியது. நவம்பர் 16ந் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சூரன்போர் மாலை 3 மணியிலிருந்து இரவு 10மணிவரை நடைபெற்றது. அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் 16.11.2015 அன்று இடம்பெற்ற சூரன்போர் காட்சிகள்

November 28th, 2015|ஆலயம்|

செந்தமிழ்க் கடவுளின் கந்தசஷ்டிப் பெருவிழா!

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்த சஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன. தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியவர்களோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, [...]

November 9th, 2015|விரதம்|

கந்தர் அந்தாதி

முன்னுரை ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர். பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் [...]

November 9th, 2015|திருப்பதிகங்கள்|

கந்தர் அலங்காரம்

அருணகிரி நாதர் அருளிய கந்தர் அலங்காரம். காப்பு[தொகு] அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல்[தொகு] பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1 அழித்துப் பிறக்கவொட்டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றீ [...]

November 9th, 2015|திருப்பதிகங்கள்|