கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் விரதங்கள் பல, அவற்றுள் சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்றவை பல. அவற்றுள் தைப்பூச விரதம் நட்சேத்திர விரதங்களுள் முக்கியமானது. இத்தினத்தில் சைவத்தமிழ் அடியார்கள் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பால்குடம், அர்ச்சனை செய்வது அவர்களது அனுஷ்டானமாகும். நிகழும் மங்களகரமான மன்மத வருடம் தை மாதம் 9ம் நாள் 23-01-2016, சனிக்கிழமை [...]