மகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. "கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி [...]