தமிழ் புதுவருடப் பிறப்பு (13-04-2016 புதன்கிழமை)

நிகழும் மங்களகரமான தமிழ் புதுவருடப் பிறப்பு 13-04-2016 புதன்கிழமை முற்பகல் 9:00 மணி 06 நிமிடத்திற்கு "துர்முகி" என்னும் பெயருடன் பிறக்கின்றது. விசு புண்ணிய காலம்: 13-04-2016 புதன்கிழமை சூரிய உதயத்தின் முன் மு. ப. 5:00 முதல் நண்பகல் 1:06 வரை "விசு" புண்ணிய காலமாகும். சிறப்பு நிறம்: பச்சைக்கரை, வெள்ளைக்கரையமைந்த புதிய பட்டாடை மருத்து நீர்: மருத்துநீர் சிரசின்மேல் வைத்து ஸ்நானம் செய்தால் சங்கிர தோசம் நீங்கும். 10-04-2016ம் திகதி முதல் ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம். [...]