admin

/admin
­

About admin

This author has not yet filled in any details.
So far admin has created 32 blog entries.

கந்தசுவாமி ஆலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன

ரொரன்ரோ - அருள்மிகு கனடா கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகளின் மிகமுக்கியமான நிகழ்வாக, ஆலயகட்டுமானத்தின் நிலக்கீழ் கட்டிட ஆரம்ப நிகழ்வுகள், கடந்த 29-06-2016 புதன்கிழமை பக்தி பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில், திருப்பணிச் சபையினர், நிர்மகணப் பணியாளர்கள், மற்றும் முகை பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படத்தொகுப்பினை இங்கே காணலாம்.

July 1st, 2016|ஆலயம், திருப்பணி|

கனடா கந்தசுவாமி கோயில் 25வது வருட பூர்த்தி – பிரதிஸ்டாதினம்

08-06-2016 புதன்கிழமை சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் - சமய குரவர் நால்வர் பிரதிஸ்டை, கும்பாபிசேகம் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் வைகாசி மாதம் 26ம் நாள் (08-06-2016) புதன்கிழமை பூர்வபட்ச சதுர்த்தி திதியும், பூச நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய காலை 7:10 மணிமுதல் 8:20 மணிவரை உள்ள மிதுன லக்ன சுபமுகூர்த்தத்தில் சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் (நடராசர்) பெருமானுக்கும், சமய குரவர் நால்வருக்கும் பிரதிஸ்டா மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது. அத்துடன் கடந்த [...]

June 5th, 2016|ஆலயம்|

தமிழ் புதுவருடப் பிறப்பு (13-04-2016 புதன்கிழமை)

நிகழும் மங்களகரமான தமிழ் புதுவருடப் பிறப்பு 13-04-2016 புதன்கிழமை முற்பகல் 9:00 மணி 06 நிமிடத்திற்கு "துர்முகி" என்னும் பெயருடன் பிறக்கின்றது. விசு புண்ணிய காலம்: 13-04-2016 புதன்கிழமை சூரிய உதயத்தின் முன் மு. ப. 5:00 முதல் நண்பகல் 1:06 வரை "விசு" புண்ணிய காலமாகும். சிறப்பு நிறம்: பச்சைக்கரை, வெள்ளைக்கரையமைந்த புதிய பட்டாடை மருத்து நீர்: மருத்துநீர் சிரசின்மேல் வைத்து ஸ்நானம் செய்தால் சங்கிர தோசம் நீங்கும். 10-04-2016ம் திகதி முதல் ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம். [...]

April 4th, 2016|ஆலயம், விரதம்|

மகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. "கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி [...]

February 29th, 2016|ஆலயம், விரதம்|

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் விரதங்கள் பல, அவற்றுள் சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்றவை பல. அவற்றுள் தைப்பூச விரதம் நட்சேத்திர விரதங்களுள் முக்கியமானது. இத்தினத்தில் சைவத்தமிழ் அடியார்கள் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பால்குடம், அர்ச்சனை செய்வது அவர்களது அனுஷ்டானமாகும். நிகழும் மங்களகரமான மன்மத வருடம் தை மாதம் 9ம் நாள் 23-01-2016, சனிக்கிழமை [...]

January 18th, 2016|ஆலயம், விரதம்|

திருவெம்பாவை

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை [...]

December 13th, 2015|திருப்பதிகங்கள்|

கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை

கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவெம்பாவை என்பது திருவாதவூரர் எனும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவாசகத்தின் நடு நாயகமாகத் திகழ்ந்திடும் ஒரு பகுதியாகும். மார்களி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன்தொடக்கம் -திருவாதிரை அன்று முடிவு பெறும் காலம். 16-12-2015 புதன்கிழமை தொடக்கம் 25-12-2015 வெள்ளி வரை கனடா கந்தசுவாமி கோயிலில் திருவெம்பாவை பூசை அதிகாலை நடைபெறும். அகிகாலை 5:00 - கிருப்பள்ளி எழுச்சி-கிரை சூக்கம் 5:30 - ஸ்நபனா அபசேகம், சிவன்-பார்வகி [...]

December 13th, 2015|ஆலயம், விரதம்|

அருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்

செந்தமிழ்க் கடவுளாம் செந்தில் குமரன் - கந்தசுவாமிப் பெருமானுக்கு, 733 Birchmond Rd, Scarborough வில் சொந்த நிலத்தில், வேத ஆகம நெறிகளுக்கு இசைவாக அழகிய தனி ஆலயம் அமைய திருவருள் கூடி, அதற்கான பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு கோயிலாகவும், தமிழ் மக்களுக்கு ஓர் தனித்துவமான கலாச்சார அடையாளமாகவும் திகழவுள்ள ஆலயத்தை அமைக்கும் திருப்பணியின் ஒரு பணியாக நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2015 மார்கழி மாதம் 3ந் திகதி நிலத்தின் கீழ் குழாய்கள் [...]

December 9th, 2015|ஆலயம், திருப்பணி|

சூரன்போர் காட்சிகள் 2015

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் வழமைபோல் சூரன்போர் இவ்வருடமும் மிகவும் சிறப்பாக, ஆலயம் நிரம்பிய பக்தர்கள் புடைசூழ நடந்தேறியது. நவம்பர் 16ந் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சூரன்போர் மாலை 3 மணியிலிருந்து இரவு 10மணிவரை நடைபெற்றது. அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் 16.11.2015 அன்று இடம்பெற்ற சூரன்போர் காட்சிகள்

November 28th, 2015|ஆலயம்|

செந்தமிழ்க் கடவுளின் கந்தசஷ்டிப் பெருவிழா!

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்த சஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன. தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியவர்களோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, [...]

November 9th, 2015|விரதம்|