ஆலயம்

/ஆலயம்
­

விநாயகர் சதுர்த்தி (ஆவணிச் சதுர்த்தி விரதம்) – 04-09-2016 ஞாயிறு

கனடா கந்தசாமி கோவலில் வீறறிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு ஆவணிச் சதுர்ததியை முன்னிட்டு 04.09.2016 காலை அஸ்டோத்தர சத கலச சங்காபிசேகம் இடம்பெற்று சுவாமி வீதிவலம் வருவார். மாலை ஸ்நபனா அபிசேகம் இடம்பெற்று விசேச பூசையை தொடர்ந்து தங்க ரதததில் விநாயகப் பெருமான் மூதி வலம் வருவார். ஆவணி வளர்பிறை சதுர்ததியன்று பரமேஸ்வரனின் திருவருளால் விநாயகப் பெருமான் தோனறினார். இதன் பயனாக இப்பெருமான் மூத்த பிள்ளையார் என்ற திருநாமத்தைப் பெற்றார். சைவசமய மக்கள் எக்காரியத்தை ஆரம்பிப்பதாயினும் பிள்ளையாருக்கு [...]

August 23rd, 2016|ஆலயம், விரதம்|

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயில் திருநடனத் திருவிழா – 25-07-2016

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயில் திருநடனத் திருவிழா யூலை மாதம் 25 ந் திகதி (25.07.2016) திங்கட் கிழமை சிறப்பாக நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட இந்திய - ஈழத்து நாதஸ்வர தவில் கலைஞர்களின் மங்கள வாத்திய இசை மழையில் பக்தர்கள் மகிழ்ந்து திளைத்தனர். தாயகத்தின் புகழ்பூத்த மூத்த நாதஸ்வர இசைக்கலைஞர், பஞ்சமூர்த்தி அவர்களும் கலந்து சிற்ப்பித்த அன்றைய தினம் மாலை பெருமான் வீதியுலா வரும் காட்சிகளை இங்கே காணலாம்.

July 26th, 2016|ஆலயம்|

சிங்கார வேலனே வா – நாதஸ்வர, தவில் இசை

கனடா கந்தசுவாமி கோயில் -  2016 ம் ஆண்டு மகோற்சவ 14ந் திருவிழா - யூலை 22, 2016

கந்தனின் ஆலய அடித்தள சுவர்கள் எழும்பிவரும் காட்சிகள் – July15, 2016

கனடா கந்தசுவாமி கோயில் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கந்தனின் திருவருளாலும் பக்தர்களின் பரிபூரண பங்களிப்புடனும் தொடர்ந்துவரும் இந்திருப்பணியின் ஓரங்கமாக அடித்தளத்திலிருந்து எழும்பிவரும் சுவர்களையும், இது தொடர்பான இதர பணிகளிகளினது காட்சிகளை இங்கே தருகின்றோம்.

July 18th, 2016|ஆலயம், திருப்பணி|

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயில் 7ந் திருவிழா காட்சிகள்

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயில் 7ந் திருவிழா, யூலை மாதம் 15ந் திகதி (15.07.2016) சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மாலை பெருமான் வீதியலா வரும் காட்சிகளை இங்கே காணலாம்.

July 17th, 2016|ஆலயம்|

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா – 01.08.2016

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், யூலை மாதம் 9ந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை நடைபெறுகின்றது. திருமுருகனின் தேர்த்திருவிழா ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி (01.08.2016) அன்று பக்தர்கள் பெருவெள்ளத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற திருவருள் கூடியுள்ளது. காலை நேர கிரிகை நேரங்கள்: 05:30 உசக்காலப் பூசை 06:00 அபிஷேகம் 07:00 காலைச்சந்திப் பூசை 07:31 தம்ப பூசை 08:30 வசந்த மண்டபப் பூசை 09:30 சுவாமி இரதத்திற்கு எழுந்தருளல் [...]

July 15th, 2016|ஆலயம், விரதம்|

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், யூலை மாதம் 9ந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை நடைபெறுகின்றது. 2ம் நாள் திருவிழா தொடக்கம் 23ம் நாள் வரையான திருவிழா நாட்களின் கிரிகை நேர விபரங்கள்: காலை நேர கிரிகை நேரங்கள்: 07:31 உசக்காலப் பூசை 08:30 நபனாபிஷேகம் 09:30 காலைச்சந்திப் பூசை 10:15 தம்ப பூசை 11:15 வசந்த மண்டபப் பூசை 11:45 சுவாமி வீதி வலம் வருதல் மாலை நேர [...]

July 15th, 2016|ஆலயம், விரதம்|

கந்தனின் ஆலய அடித்தள சுவர்கள் எழும்பிவரும் காட்சிகள்

கனடா கந்தசுவாமி கோயில் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கந்தனின் திருவருளாலும் பக்தர்களின் பரிபூரண பங்களிப்புடனும் தொடர்ந்துவரும் இந்திருப்பணியின் ஓரங்கமாக அடித்தளத்திலிருந்து எழும்பிவரும் சுவர்களையும், இது தொடர்பான இதர பணிகளிகளினது காட்சிகளை இங்கே தருகின்றோம்.    

July 9th, 2016|ஆலயம், திருப்பணி|

கந்தசுவாமி ஆலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன

ரொரன்ரோ - அருள்மிகு கனடா கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகளின் மிகமுக்கியமான நிகழ்வாக, ஆலயகட்டுமானத்தின் நிலக்கீழ் கட்டிட ஆரம்ப நிகழ்வுகள், கடந்த 29-06-2016 புதன்கிழமை பக்தி பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில், திருப்பணிச் சபையினர், நிர்மகணப் பணியாளர்கள், மற்றும் முகை பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படத்தொகுப்பினை இங்கே காணலாம்.

July 1st, 2016|ஆலயம், திருப்பணி|

கனடா கந்தசுவாமி கோயில் 25வது வருட பூர்த்தி – பிரதிஸ்டாதினம்

08-06-2016 புதன்கிழமை சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் - சமய குரவர் நால்வர் பிரதிஸ்டை, கும்பாபிசேகம் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் வைகாசி மாதம் 26ம் நாள் (08-06-2016) புதன்கிழமை பூர்வபட்ச சதுர்த்தி திதியும், பூச நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய காலை 7:10 மணிமுதல் 8:20 மணிவரை உள்ள மிதுன லக்ன சுபமுகூர்த்தத்தில் சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் (நடராசர்) பெருமானுக்கும், சமய குரவர் நால்வருக்கும் பிரதிஸ்டா மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது. அத்துடன் கடந்த [...]

June 5th, 2016|ஆலயம்|