ஆலயம்

/ஆலயம்
­

தமிழ் புதுவருடப் பிறப்பு (13-04-2016 புதன்கிழமை)

நிகழும் மங்களகரமான தமிழ் புதுவருடப் பிறப்பு 13-04-2016 புதன்கிழமை முற்பகல் 9:00 மணி 06 நிமிடத்திற்கு "துர்முகி" என்னும் பெயருடன் பிறக்கின்றது. விசு புண்ணிய காலம்: 13-04-2016 புதன்கிழமை சூரிய உதயத்தின் முன் மு. ப. 5:00 முதல் நண்பகல் 1:06 வரை "விசு" புண்ணிய காலமாகும். சிறப்பு நிறம்: பச்சைக்கரை, வெள்ளைக்கரையமைந்த புதிய பட்டாடை மருத்து நீர்: மருத்துநீர் சிரசின்மேல் வைத்து ஸ்நானம் செய்தால் சங்கிர தோசம் நீங்கும். 10-04-2016ம் திகதி முதல் ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம். [...]

April 4th, 2016|ஆலயம், விரதம்|

மகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. "கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி [...]

February 29th, 2016|ஆலயம், விரதம்|

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் விரதங்கள் பல, அவற்றுள் சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்றவை பல. அவற்றுள் தைப்பூச விரதம் நட்சேத்திர விரதங்களுள் முக்கியமானது. இத்தினத்தில் சைவத்தமிழ் அடியார்கள் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பால்குடம், அர்ச்சனை செய்வது அவர்களது அனுஷ்டானமாகும். நிகழும் மங்களகரமான மன்மத வருடம் தை மாதம் 9ம் நாள் 23-01-2016, சனிக்கிழமை [...]

January 18th, 2016|ஆலயம், விரதம்|

கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை

கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவெம்பாவை என்பது திருவாதவூரர் எனும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவாசகத்தின் நடு நாயகமாகத் திகழ்ந்திடும் ஒரு பகுதியாகும். மார்களி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன்தொடக்கம் -திருவாதிரை அன்று முடிவு பெறும் காலம். 16-12-2015 புதன்கிழமை தொடக்கம் 25-12-2015 வெள்ளி வரை கனடா கந்தசுவாமி கோயிலில் திருவெம்பாவை பூசை அதிகாலை நடைபெறும். அகிகாலை 5:00 - கிருப்பள்ளி எழுச்சி-கிரை சூக்கம் 5:30 - ஸ்நபனா அபசேகம், சிவன்-பார்வகி [...]

December 13th, 2015|ஆலயம், விரதம்|

அருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்

செந்தமிழ்க் கடவுளாம் செந்தில் குமரன் - கந்தசுவாமிப் பெருமானுக்கு, 733 Birchmond Rd, Scarborough வில் சொந்த நிலத்தில், வேத ஆகம நெறிகளுக்கு இசைவாக அழகிய தனி ஆலயம் அமைய திருவருள் கூடி, அதற்கான பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு கோயிலாகவும், தமிழ் மக்களுக்கு ஓர் தனித்துவமான கலாச்சார அடையாளமாகவும் திகழவுள்ள ஆலயத்தை அமைக்கும் திருப்பணியின் ஒரு பணியாக நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2015 மார்கழி மாதம் 3ந் திகதி நிலத்தின் கீழ் குழாய்கள் [...]

December 9th, 2015|ஆலயம், திருப்பணி|

சூரன்போர் காட்சிகள் 2015

அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் வழமைபோல் சூரன்போர் இவ்வருடமும் மிகவும் சிறப்பாக, ஆலயம் நிரம்பிய பக்தர்கள் புடைசூழ நடந்தேறியது. நவம்பர் 16ந் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சூரன்போர் மாலை 3 மணியிலிருந்து இரவு 10மணிவரை நடைபெற்றது. அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் 16.11.2015 அன்று இடம்பெற்ற சூரன்போர் காட்சிகள்

November 28th, 2015|ஆலயம்|