விரதம்

/விரதம்
­

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்

முருகன் துணை உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. "அமரர் இடர் தீர அமரம் புரிந்த  குமரன் அடி நெஞ்சே குறி" சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற [...]

November 10th, 2017|ஆலயம், விரதம்|

நவராத்திரி பற்றி சத்குரு

யோகக் கலாச்சாரத்தில், தட்சிணாயண காலத்தை (ஆடி முதல் மார்கழி வரை) சாதனா பாதை என்று அழைப்பார்கள். உத்தராயணத்தை (தை முதல் ஆனி வரை) ஞானப் பாதை என்று அழைப்பார்கள். அந்த 6 மாத சாதனா பாதையில் கடைசி மூன்று மாதங்கள் தேவியின் பாதையாக இருக்கிறது. சில சாதகர்கள் சில வகையான சாதனாக்களை அன்றைய தினத்திலிருந்து செய்யத் துவங்குவார்கள். அடிப்படையில் அந்த மூன்று மாதங்கள் பெண் தெய்வத்துக்கான காலகட்டம். இந்த காலகட்டம் தேவிக்கு உரியது. இந்த காலகட்டத்தில் பூமி [...]

October 9th, 2016|ஆலயம், விரதம்|

நவராத்திரி விரதம் 2016

நவராத்திரி விரதம் 01-10-2016 சனி முதல் 09-10-2016 ஞாயிறு வரை நவராத்திரி விரதம்: சக்தி தத்துவம் நம் இந்துமதத்தின் ஆணிவேராக விளங்குகின்றது. ஆன்மாக்களைத் தனது கருணையினால் பிறவிப் பிணியிலிருந்தும் காத்து எல்லாம் வல்ல சிவனிடம் சேர்ப்பவளாக அன்னை பராசக்தி விளங்குகிறாள். பூத்தவளாயும் புவனம் பதினான்கையும் காத்தவளாயும், கறை கண்டனுக்கு மூத்தவளாயும் முகுந்தனுக்கு இளையவளாயும் விளங்கும் அன்னை கல்விக்குச் சரஸ்வதியாகவும் செல்வத்துக்கு இலட்சுமியாகவும் மூரத்திற்கு துர்க்கையாகவும் நின்று அருள்புரிகிறாள். இந்த முப்பெருந் தேவியர் விழா 01-10-2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை [...]

September 25th, 2016|ஆலயம், விரதம்|

விநாயகர் சதுர்த்தி (ஆவணிச் சதுர்த்தி விரதம்) – 04-09-2016 ஞாயிறு

கனடா கந்தசாமி கோவலில் வீறறிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு ஆவணிச் சதுர்ததியை முன்னிட்டு 04.09.2016 காலை அஸ்டோத்தர சத கலச சங்காபிசேகம் இடம்பெற்று சுவாமி வீதிவலம் வருவார். மாலை ஸ்நபனா அபிசேகம் இடம்பெற்று விசேச பூசையை தொடர்ந்து தங்க ரதததில் விநாயகப் பெருமான் மூதி வலம் வருவார். ஆவணி வளர்பிறை சதுர்ததியன்று பரமேஸ்வரனின் திருவருளால் விநாயகப் பெருமான் தோனறினார். இதன் பயனாக இப்பெருமான் மூத்த பிள்ளையார் என்ற திருநாமத்தைப் பெற்றார். சைவசமய மக்கள் எக்காரியத்தை ஆரம்பிப்பதாயினும் பிள்ளையாருக்கு [...]

August 23rd, 2016|ஆலயம், விரதம்|

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா – 01.08.2016

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், யூலை மாதம் 9ந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை நடைபெறுகின்றது. திருமுருகனின் தேர்த்திருவிழா ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி (01.08.2016) அன்று பக்தர்கள் பெருவெள்ளத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற திருவருள் கூடியுள்ளது. காலை நேர கிரிகை நேரங்கள்: 05:30 உசக்காலப் பூசை 06:00 அபிஷேகம் 07:00 காலைச்சந்திப் பூசை 07:31 தம்ப பூசை 08:30 வசந்த மண்டபப் பூசை 09:30 சுவாமி இரதத்திற்கு எழுந்தருளல் [...]

July 15th, 2016|ஆலயம், விரதம்|

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், யூலை மாதம் 9ந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை நடைபெறுகின்றது. 2ம் நாள் திருவிழா தொடக்கம் 23ம் நாள் வரையான திருவிழா நாட்களின் கிரிகை நேர விபரங்கள்: காலை நேர கிரிகை நேரங்கள்: 07:31 உசக்காலப் பூசை 08:30 நபனாபிஷேகம் 09:30 காலைச்சந்திப் பூசை 10:15 தம்ப பூசை 11:15 வசந்த மண்டபப் பூசை 11:45 சுவாமி வீதி வலம் வருதல் மாலை நேர [...]

July 15th, 2016|ஆலயம், விரதம்|

தமிழ் புதுவருடப் பிறப்பு (13-04-2016 புதன்கிழமை)

நிகழும் மங்களகரமான தமிழ் புதுவருடப் பிறப்பு 13-04-2016 புதன்கிழமை முற்பகல் 9:00 மணி 06 நிமிடத்திற்கு "துர்முகி" என்னும் பெயருடன் பிறக்கின்றது. விசு புண்ணிய காலம்: 13-04-2016 புதன்கிழமை சூரிய உதயத்தின் முன் மு. ப. 5:00 முதல் நண்பகல் 1:06 வரை "விசு" புண்ணிய காலமாகும். சிறப்பு நிறம்: பச்சைக்கரை, வெள்ளைக்கரையமைந்த புதிய பட்டாடை மருத்து நீர்: மருத்துநீர் சிரசின்மேல் வைத்து ஸ்நானம் செய்தால் சங்கிர தோசம் நீங்கும். 10-04-2016ம் திகதி முதல் ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம். [...]

April 4th, 2016|ஆலயம், விரதம்|

மகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. "கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி [...]

February 29th, 2016|ஆலயம், விரதம்|

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

கனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் விரதங்கள் பல, அவற்றுள் சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்றவை பல. அவற்றுள் தைப்பூச விரதம் நட்சேத்திர விரதங்களுள் முக்கியமானது. இத்தினத்தில் சைவத்தமிழ் அடியார்கள் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பால்குடம், அர்ச்சனை செய்வது அவர்களது அனுஷ்டானமாகும். நிகழும் மங்களகரமான மன்மத வருடம் தை மாதம் 9ம் நாள் 23-01-2016, சனிக்கிழமை [...]

January 18th, 2016|ஆலயம், விரதம்|

கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை

கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவெம்பாவை என்பது திருவாதவூரர் எனும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவாசகத்தின் நடு நாயகமாகத் திகழ்ந்திடும் ஒரு பகுதியாகும். மார்களி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன்தொடக்கம் -திருவாதிரை அன்று முடிவு பெறும் காலம். 16-12-2015 புதன்கிழமை தொடக்கம் 25-12-2015 வெள்ளி வரை கனடா கந்தசுவாமி கோயிலில் திருவெம்பாவை பூசை அதிகாலை நடைபெறும். அகிகாலை 5:00 - கிருப்பள்ளி எழுச்சி-கிரை சூக்கம் 5:30 - ஸ்நபனா அபசேகம், சிவன்-பார்வகி [...]

December 13th, 2015|ஆலயம், விரதம்|